கோலாலம்பூர்,டிச 31: பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தனது புத்தாண்டு சிறப்பு உரையை இன்று இரவு 9 மணிக்கு ஆற்றுவார். பொதுமக்கள் அதை அனைத்து உள்ளூர் மற்றும் சமூக ஊடக தளங்களில் காணலாம்.
"2025 ஆம் ஆண்டிற்கான நாட்டின் இலக்குகள் மற்றும் திசையை கோடிட்டுக் காட்டுவதுடன், இந்த ஆண்டு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் மற்றும் சாதனைகளை முன்னிலைப்படுத்தி புத்தாண்டு செய்தியை இன்று வழங்குவேன் என பிரதமர் அறிவித்தார்.
"இந்த திட்டமிட்ட முயற்சியும் சேவையும் மக்களையும் நாட்டையும் நல்வழிப்படுத்தும் என்று நம்புகிறேன்," என அவர் தனது முகநூல் பதிவில் தெரிவித்துள்ளார்.
– பெர்னாமா


