கோலாலம்பூர், டிச.30: பெண் ஒருவரின் 170,000 ரிங்கிட் பணத்தை மறைக்க முற்பட்டதாக குற்றம் சாட்டப்பட்ட இல்லத்தரசி ஒருவர் இன்று செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றத்தை மறுத்து விசாரணை கோரினார்.
பிப்ரவரி 14 மற்றும் மார்ச் 8க்கு இடையில்,சியா மின் மின் (48)என்பவருக்கு சொந்தமான RM170,000 ஐ மறைக்க முற்பட்டதாக 63 வயதான ஜரிதோன் சாடியா புஹாரி மீது குற்றம் சாட்டப்பட்டது.
குற்றவியல் சட்டப் பிரிவு 424 இன் கீழ் குற்றம் நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சமாக ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும்.
ஓர் உத்தரவாதத்துடன் RM20,000 ஜாமீன் மற்றும் கூடுதல் நிபந்தனைகளுடன் குற்றம் சாட்டப்பட்டவர் மாதத்திற்கு ஒருமுறை அருகிலுள்ள காவல் நிலையத்திற்குச் செல்ல வேண்டும் மற்றும் வழக்கு முடியும்வரை அவரின் பாஸ்போர்ட்டை நீதிமன்றத்தில் ஒப்படைக்க பிரதி அரசு வக்கீல் அதிகா நஜிஹா ஆஸ்மி பரிந்துரைத்தார்.
அப்பெண், வேலையில்லாதவர் மற்றும் நான்கு குழந்தைகளின் தாய் என்பதால் குறைந்த ஜாமீன் கோரி மேல்முறையீடு செய்தார்.
குற்றம் சாட்டப்பட்டவருக்கு ஓர் உத்தரவாதத்துடன் மற்றும் கூடுதல் நிபந்தனைகளுடன் RM10,000 ஜாமீன் வழங்க நீதிபதி முகமட் காஃப்லி சே அலி
அனுமதித்தார். மேலும், வழக்கை அடுத்த ஆண்டு பிப்ரவரி 5 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.
– பெர்னாமா


