ANTARABANGSA

விமானம் அவசரமாகத் தரையிறங்கிய சம்பவம்-  நோர்வே விமான நிலையம் மீண்டும் திறக்கப்பட்டது

30 டிசம்பர் 2024, 9:34 AM
விமானம் அவசரமாகத் தரையிறங்கிய சம்பவம்-  நோர்வே விமான நிலையம் மீண்டும் திறக்கப்பட்டது

ஒஸ்லோ, டிச. 30 - கடந்த சனிக்கிழமை மாலை அவசரமாக தரையிறங்கும்போது ராயல் டச்சு ஏர்லைன்ஸ் (கே.எல்.எம்.) நிறுவனத்தின்போயிங் 737 விமானம் ஓடுபாதையிலிருந்து  விலகியதைத் தொடர்ந்து மூடப்பட்ட  நோர்வேயில் உள்ள டார்ப் விமான நிலையம்  நேற்று பிற்பகல் மீண்டும் செயல்படத் தொடங்கியது என்று சின்ஹுவா செய்தி நிறுவனம் தெரிவித்தது.

இந்த சம்பவம் சுமார் 5,000 பயணிகள் சம்பந்தப்பட்ட விமானப் பயணங்களைப் பாதித்தது. இதன் காரணமாக வார இறுதியில் பல பயணங்களில் ரத்து மற்றும் தாமதங்கள் ஏற்பட்டன என்று தேசிய ஒளிபரப்புநிறுவனம் கூறியது.

ஒஸ்லோவில் இருந்து ஆம்ஸ்டர்டாம் செல்லும் வழியில் ஹைட்ராலிக் கோளாறு ஏற்பட்டதாகக் கூறப்பட்டதைத் தொடர்ந்து அந்த விமானம் டார்ப் விமான நிலையத்திற்கு திருப்பி விடப்பட்டது. இரவு 7.00 மணிக்கு தரையிறங்கிய அந்த விமானம்  ஓடுபாதையில் இருந்து விலகி புல் தரையில் சிக்கயது.  அதிலிருந்த அனைத்து 176 பயணிகளும் ஆறு பணியாளர்களும் காயமின்றி பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர் என்று கே.எல்.எம். ஒரு அறிக்கையில் தெரிவித்தது.

விமானம் அவசரமாக தரையிறங்கும்போது அனுபவித்த  உணர்வை பயணிகள்  விவரித்தனர். ஒரு பயணி விமானம் பாதுகாப்பாகத் தரையிறங்கியதும் பலத்த கரவொலி எழுந்ததை பயணி ஒருவர் நினைவு கூர்ந்தார். விமானத்திலிருந்து வெளியேற்றப்பட்ட பயணிகள் பஸ் மூலம் முனையத்திற்கு கொண்டு வரப்பட்டு பின்னர் ஓஸ்லோ கார்டர்மோன் விமான நிலையத்தில்  ஹோட்டல் தங்குமிட ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

விமானத்தை அகற்றுவதற்கு அங்கீகாரம் வழங்குவதற்கு முன்னர் நோர்வே போலீஸாரும் நோர்வே விபத்துப் புலனாய்வு பிரிவினரும் தொடக்கக்கட்ட  விசாரணையை மேற்கொண்டனர். விமானம் சேற்றில் சிக்கியதால் மீட்பு பணி தாமதமானது.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.