மாஸ்கோ/பாகு, டிச 30: அஜர்பைஜான் விமான விபத்துக்கு அந்நாட்டு
அதிபரிடம் ரஷ்ய அதிபர் விலாடிமிர் புடின் மன்னிப் கோரினார். உக்ரேனிய
ட்ரோன்களுக்கு எதிராக ரஷ்யா பாய்ச்சிய தற்காப்பு எறிபடைகள்
அஜர்பைஜான் விமானத்தை தாக்கியதால் ஏற்பட்ட அந்த விபத்தை
துயரமான சம்பவம் என கிரெம்ளின் வர்ணித்தது.
மிகவும் அரிதாக வெளியிடப்படும் புடினின் இத்தகைய மன்னிப்பு, கடந்த
புதன் கிழமை நிகழ்ந்த அந்த விபத்துக்கு பொறுபேற்கும் விதமாக அமைந்துள்ளது. எனினும், அந்த விமானத்தை ரஷ்யா சுட்டு வீழத்தியதாக அறிக்கையில் குறிப்பிடப்படவில்லை. கிரிமினல் விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக மட்டுமே அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பாகுவிலிருந்து செஸ்னிய தலைநகர் குரோன்ஸி நோக்கி சென்று
கொண்டிருந்த அந்த விமானம் கஜகஸ்தானில் உள்ள அக்தாவ் அருகே
அவசரமாகத் தரையிறங்கிய போது விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில்
38 பயணிகள் உயிரிழந்தனர்.
ரஷ்யா தற்காப்பு சாதனங்கள் இந்த விமானத்தை தவறுதலாகச் சுட்டது
அஜர்பைஜான் அரசின் தொடக்கக் கட்ட விசாரணைகள் காட்டுவதாக அந்த
விசாரணை குழுவுக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்தன.
அஜர்பைஜான் அதிபர் இல்ஹாம் அலியோவை தொடர்பு கொண்ட புடின்,
ரஷ்யாவில் நிகழ்ந்த இந்த துயரச் சம்பவத்திற்க மன்னிப்பு கோரியதோடு
இச்சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தனது ஆழ்ந்த
அனுதாபத்தையும் தெரிவித்துக் கொண்டார்.
இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் சிவிலியன்களும் இராணுவ நிபுணர்களும் விசாரிக்கப்பட்டு வருவதாக கிரெம்ளின் கூறியது.


