முவான், (தென் கொரியா), டிச 29- தென் கொரிய பயணிகள் விமானம் ஒன்று ஓடுபாதை விட்டு விலகி விமான நிலைய வேலியை மோதியது. இச்சம்பவம் நாட்டின் தென்மேற்கு நகரமான முவானில் இன்று காலை 9.07 மணிக்கு நிகழ்ந்ததாக தீயணைப்புத் துறையினரை மேற்கோள் காட்டி யோன்ஹாப் ஏஜென்சி செய்தி வெளியிட்டுள்ளது.
சியோல் நகரிலிருந்து சுமார் 288 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள ஜிலியோ மாநிலத்தின் முவான் அனைத்துலக விமான நிலையத்தில் தரையிறங்க முயன்ற போது ஜெஜூ ஏர் விமான நிறுவனத்திற்கு சொந்தமான அந்த விமானம் விபத்துக்குள்ளானது.
தாய்லாந்தின் பேங்காக்கிலிருந்து வந்த அந்த விமானத்தில் 175 பயணிகளும் ஆறு விமானப் பணியாளர்களும் இருந்தனர்.
விபத்து நிகழ்ந்த பகுதியில் மீட்புப் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் விபத்துக்கான காரணத்தைக் கண்றிவதற்காக அதிகாரிகள் அங்கு ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.


