பெட்டாலிங் ஜெயா டிசம் 28;- மலாக்கா பாஸ் இளைஞர் தலைவர் ஒருவர், மலாக்கா மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டாக்டர் அக்மால் சலேவை, டி. ஏ. பி உடன் ஒத்துழைக்கும் ஒரு மாநில அரசாங்கத்தில் உறுப்பினராக இருப்பதற்கு சாடியுள்ளார்.
அம்னோவின் கொள்கைகளுக்கு ஏற்ப அக்மால் மாநில எஸ்கோ பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என வலியுறுத்தினார். மலாக்கா பாஸ் தகவல் பிரிவு தலைவர் அஹ்மத் பிலால் ரகுடின் புதிதாக பாஸுக்கு கட்சி தாவி இருக்கும் ஒரு அம்னோ உறுப்பினரான மான் ஜெய்லானி காமிஸ் தொடர்பாக மாநில சட்டசபையில் வார்த்தை போரில் ஈடுபட்டுள்ள அக்மாலை, மலாக்கா பாஸ் இளைஞர் தலைவர் சாடினார்.
அக்மால் ஜெய்லானியை "துரோகி" மற்றும் "தவளை" என்று முத்திரை குத்தியதுடன், ஜெய்லானியின் ரெம்பியா தொகுதி காலியாகி விட்டதாக மாநில சட்டப்பேரவை சபாநாயகர் ஏன் அறிவிக்கவில்லை என்பதை அறிய விரும்புவதாக அக்மால் கோரிக்கை வைத்திருந்தார்.
இன்று ஒரு அறிக்கையில், அஹ்மத் பிலால், தேர்ந்தெடுக்கப்பட்ட ஒவ்வொரு பிரதிநிதிக்கும் அவர்களின் கொள்கைகள் மற்றும் நம்பிக்கைகளின் அடிப்படையில் அரசியல் முடிவுகளை எடுக்க உரிமை உண்டு என்றார்.
"அம்னோவை விட்டு வெளியேற ஜெய்லானி எடுத்த முடிவு, அம்னோ தலைவர் கட்சிக்கும் முழு மலாய் சமூகத்திற்கும் துரோகம் இழைத்ததை எதிர்த்து எடுக்கப்பட்டது" என்று அவர் கூறினார்.
அக்மால் (அம்னோவின்) போராட்டத்தின் கொள்கைகளை உறுதியாக கடைப்பிடிக்கும் ஒரு சட்டமன்ற உறுப்பினராக இருந்தால், டி. ஏ. பி உடன் ஒத்துழைப்பதில் அவர் வெட்கப்பட வேண்டும், ஒன்றுப்பட்ட அரசாங்கத்தில் இணைந்து வேலை செய்வதை சாடி மலாக்கா பாஸ் அறிக்கை விட்டது.
அக்மால் தனது கொள்கைகளை உண்மையிலேயே கடைப்பிடித்தால், டிஏபி உடன் ஒத்துழைக்கும் அரசாங்கத்தை விட்டு வெளியேற வேண்டும்.
ஜெய்லானி 2021 மலாக்கா மாநில தேர்தலில் பாரிசன் நேஷனல் டிக்கெட்டில் ரெம்பியா தொகுதிக்கு தேர்ந்தெடுக்கப் பட்டார். கடந்த ஆண்டு ஜூலை மாதம், ஜோகூரின் பக்ரியில் சிம்பாங் ஜெராம் இடைத்தேர்தலுக்கான பெரிக்காத்தான் நேஷனல் வேட்பாளர் அறிமுகத்தில் கலந்து கொண்டு கட்சியை அவமானப் படுத்தியதாகக் கூறி அம்னோவால் ஆறு ஆண்டுகள் இடைநீக்கம் செய்யப்பட்டார்.
ஜெய்லானி ஜூன் 10, 2023 அன்று PAS இல் சேர்ந்ததாக PAS பொதுச்செயலாளர் தாக்கியுடின் ஹசான் ஜூலை 16 அன்று அறிவித்ததை தொடர்ந்து அம்னோ மற்றும் பாஸ் இடையிலான புகைச்சல்கள் மேலோங்கி வருகிறது.


