ஜோகூர் பாரு, டிச. 29- மெர்சிங், ஜாலான் மெர்சிங் நித்தார், பெல்டா நித்தார் 1 அருகே நேற்று நிகழ்ந்த டிரெய்லர் மற்றும் பல்நோக்கு வாகனம் (எம்.பி.வி.) சம்பந்தப்பட்ட விபத்தில் மூன்று சிறார்கள் உட்பட எட்டு பேர் காயமடைந்தனர்.
இந்த விபத்து தொடர்பில் நேற்று மாலை 3.01 மணிக்கு தங்களுக்கு அவசர அழைப்பு வந்ததாக மெர்சிங் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தின் மூத்த தீயணைப்பு அதிகாரி II ஷம்சுரி ஷபாய் கூறினார்.
இதனைத் தொடர்ந்து மெர்சிங் தீயணைப்பு நிலையத்தைச் சேர்ந்த 13 உறுப்பினர்களைக் கொண்டக் குழு
இரு வண்டிகளில் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டது.
மாலை 3.21 மணிக்கு விபத்து நடந்த இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள், சிறப்பு மீட்பு உபகரணங்களைப் பயன்படுத்தி எம் பி.வி. வாகனத்தின் இடிபாடுகளில் சிக்கிக்கொண்டிருந்த ஓட்டுநர் உட்பட 8 பேரையும் மீட்டனர் என்று அவர் ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
இந்த விபத்தில் டிரெய்லர் ஓட்டுநருக்கு காயம் ஏற்படவில்லை என்றும்
பாதிக்கப்பட்ட அனைவரும் மேல் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.


