நியூயார்க், டிச.28- கடுமையான குளிர் மற்றும் தங்குமிடம் இல்லாத காரணத்தால் காஸா பகுதியில் குழந்தைகள் உயிரிழப்பதாக மேற்கு ஆசியாவில் உள்ள பாலஸ்தீன அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் நிவாரண மற்றும் பணி நிறுவனத்தின் தலைமை ஆணையர் பிலிப் லாஸரினி தெரிவித்துள்ளார்.
அதே நேரத்தில், போர்வைகள், மெத்தைகள் மற்றும் பிற குளிர்கால பொருட்கள் காஸாவுக்கு கொண்டு வருவதற்கான விண்ணப்பங்கள் பல மாதங்கள் நிலுவையில் உள்ளது இப்பகுதியில் நிலைமையை மேலும் மோசமாக்கியுள்ளது என அவர் தனது எக்ஸ் தளப் பதிவில் கூறியதாக பாலஸ்தீன செய்தி நிறுவனம் (வாஃபா) தெரிவித்தது.
உடனடி போர்நிறுத்தம் தொடர்பான கோரிக்கையை மீண்டும் வலியுறுத்தும் அதே வேளையில் குளிர்காலத்திற்கான பொருட்கள் உட்பட மிகவும் தேவையான அடிப்படை பொருட்களை உடனடியாக வழங்குமாறு அவர் வேண்டுகோள் விடுத்தார்.


