குவாந்தான், டிச.28- பொருள் படாடுவாடா மற்றும் சரக்கு விநியோக நிறுவனத்திற்குச் சொந்தமான கொள்கலன் லோரி ஒன்று இன்று காலை 6.45 மணியளவில் ஜாலான் குவாந்தான்-கோலாலம்பூர் சாலையின் 74 வது கிலோமீட்டரில் மாரான் அருகே தடம் புரண்டது.
பள்ளி ஒற்றின் எதிரே நிகழ்ந்த இந்த விபத்து காரணமாக அந்த சாலையில் போக்குவரத்து தடைபட்டுள்ளதாகவும் வாகனமோட்டிகள் தற்போதைக்கு மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்படுவதாகவும் மாரான் மாவட்ட காவல்துறைத் தலைவர் சூப்ரிண்டெண்டன் வோங் கிம் வை தெரிவித்தார்.
இந்த விபத்தில் யாருக்கும் காயமின்றி வாகனத்திற்கு மட்டுமே சேதம் ஏற்பட்டது. இந்த விபத்தின் காரணமாக மாரானிலிருந்து குவாந்தான் நோக்கிச் செல்லும் சாலையை தற்காலிகமாக மூட வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
கவிழ்ந்த கொள்கலன் லாரியை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது என்றும் அவர் சொன்னார்.


