செர்டாங், டிச 27: RM1.8 மில்லியன் மதிப்புள்ள சூதாட்ட உபகரணங்கள், கடத்தல் பொருட்கள், சிகரெட்டுகள் மற்றும் சிமுலேட்டர் இயந்திரங்கள் உள்ளிட்ட பல்வேறு வழக்குப் பொருட்களை செர்டாங் காவல்துறையினர் அழித்தனர்.
இது 2016இலிருந்து 2023 வரையில் முடிக்கப்பட்ட 336 வழக்குகள் சம்பந்தப்பட்ட 353,400 யூனிட் பொருட்களாகும் என செர்டாங் மாவட்ட காவல்துறைத் தலைவர் ஏ.சி.பி ஏ. அன்பழகன் தெரிவித்தார்.
"இதில் 168 யூனிட் மடிக்கணினிகள், 59 யூனிட் டேப்லெட்டுகள், 32 மோடம்கள் மற்றும் ரவுட்டர்கள், 14 சிமுலேட்டர் இயந்திரங்கள் ஆகியவை அடங்கும் என்றார்.
காவல்துறை தலைமைக் கண்காணிப்பாளரின் நிலையியற் கட்டளை (PTKPN D207) மற்றும் குற்றவியல் நடைமுறைச் சட்டம் (சட்டம் 593) பிரிவு 407A இன் கீழ் உள்ள சட்ட விதிகளின் அடிப்படையில் இந்தஅழிக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக அன்பழகன் கூறினார்.
இது மறைமுகமாக பராமரிப்பு செலவை மிச்சப்படுத்துவதோடு, எதிர்காலத்தில் விசாரணை பொருட்களுக்கான சேமிப்பு இடத்தின் சிக்கலையும் சமாளிக்கும்,'' என்றார்.
– பெர்னாமா


