ஷா ஆலம், டிச 27: பெரும்பாலான மக்களை பாதிக்கும் மின் கட்டண உயர்வை தான் ஒருபோதும் அனுமதிக்க முடியாது என பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.
அதன் விகித அதிகரிப்பு பெரும்பான்மையான மக்கள் மீது சுமத்தப்படாது.மாறாக இதில் உயர் வர்க்கம் அல்லது லாபத்தை பதிவு செய்யும் தொழில்கள் ஈடுபடுத்தப்படும் என்றார்.
"இது தொடர்பாக தெனாகா நேஷனல் பெர்ஹாட் (TNB) மற்றும் துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ ஃபடில்லா யூசோப் தெளிவாக விளக்குவார்கள்,`` என இன்று கெடாவில் உள்ள லங்காவி அல்-ஹானா மசூதியில் செய்தியாளர்களை சந்தித்தபோது கூறினார்.


