கோத்தா பாரு, டிச. 27- பாசீர் மாஸ், ரந்தாவ் பாஞ்சாங்கில் உள்ள
சட்டவிரோத ஏபெக் தளத்தின் வாயிலாக 15,000 வெள்ளிக்கும் மேல்
மதிப்புள்ள அழகு சாதனப் பொருள்ளகளை கடத்துவதற்கு
மேற்கொள்ளப்பட்ட முயற்சியை பொது நடவடிக்கை குழுவின் (பி.ஜி.ஏ.)
தென்கிழக்கு படைப்பிரிவு முறியடித்தது.
நேற்றிரவு 12.30 மணியளவில் அப்பகுதியில் ஓப் தாரிங் வாவாசான்
கிளந்தான் சோதனை நடவடிக்கையை மேற்கொண்டிருந்த 9வது
பட்டாளத்தின் உறுப்பினர்கள் பெட்டி ஒன்றைக் கண்டு பிடித்ததாக
தென்கிழக்கு பிராந்திய பி.ஜி.ஏ. கமாண்டர் டத்தோ நிக் ரோஸ் அஸான்
நிக் அப்துல் ஹமிட் கூறினார்.
அந்த பெட்டியைக் சோதனை செய்ததில் அதில் அழகு சாதனப் பொருள்கள்
இருப்பது கண்டறியப்பட்டதாகக் கூறிய அவர், முறையான ஆவணங்கள்
ஏதும் இல்லாத அப்பொருள்கள் உள்நாட்டு சந்தையில் விற்பனை
செய்வதற்காக தாய்லாந்திலிருந்து கொண்டு வரப்பட்டிருக்கலாம் என
நம்பப்படுகிறது என்றார்.
கைப்பற்றப்பட்ட அழகு சாதனப் பொருள்களின் மதிப்பு 15,130
வெள்ளியாகும். இந்த பறிமுதல் தொடர்பில 1984ஆம் ஆண்டு மருந்து
மற்றும் அழகுசாதனப் பொருள் சட்டத்தின் 7(1)(ஏ) பிரிவின் கீழ்
விசாரிக்கப்பட்டு வருகிறது என்று அவர் சொன்னார்.


