NATIONAL

மலேசியாவில் கால்நடைத் தொழில்துறையின் வர்த்தகம் RM1.4 பில்லியனாக அதிகரிப்பு

27 டிசம்பர் 2024, 5:38 AM
மலேசியாவில் கால்நடைத் தொழில்துறையின் வர்த்தகம் RM1.4 பில்லியனாக அதிகரிப்பு

கோலாலம்பூர், டிச 27: மலேசியாவில் கால்நடைத் தொழில்துறையின் மொத்த வர்த்தகம் 2023 ஆண்டு 23.2 சதவீதம் அல்லது RM254.7 மில்லியன் அதிகரித்து RM1.4 பில்லியனாக உள்ளது என மலேசிய புள்ளியியல் துறை தெரிவித்துள்ளது.

இந்த வளர்ச்சியானது உள்நாட்டு மற்றும் தொழில்துறை நுகர்வு தேவைகளை பூர்த்தி செய்ய கால்நடைகள் மற்றும் அதன் தொடர்புடைய பொருட்களுக்கான தேவையின் அதிகரிப்பை பிரதிபலிக்கிறது என மலேசிய புள்ளியியல் துறை தெரிவித்தது.

கோழி, முட்டை, கால்நடைகள், செம்மறி ஆடுகள், வாத்துகள் மற்றும் பன்றிகள் போன்ற தேர்ந்தெடுக்கப்பட்ட கால்நடைகளில் கவனம் செலுத்துவதன் மூலம் கால்நடைத் தொழிலுக்கான மலேசியாவின் வர்த்தக செயல்திறனை மலேசியா வர்த்தக புள்ளியியல் மதிப்பாய்வு (MTSR) 2024 ஒருங்கிணைக்கிறது.

கடந்த சில ஆண்டுகளாக மலேசிய கால்நடைத் தொழில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. இதனால், நாட்டின் விவசாயத் துறையில் குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்து வருகிறது என தலைமைப் புள்ளியியல் நிபுணர் டத்தோஸ்ரீ முகமட் உசிர் மஹிடின் கூறினார்.

"கால்நடை துணைத் துறையில் கோழி மற்றும் முட்டைத் துறை மிகப்பெரிய பங்களிப்பாளராக உள்ளது மற்றும் மலேசியர்களின் புரதத் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

"கோழியின் ஏற்றுமதி மதிப்பு 2023 இல் RM726.7 மில்லியனை எட்டியது. இது 2022ஆம் ஆண்டை விட 27 சதவீதம் அல்லது RM154.4 மில்லியன் அதிகமாகும்" என்று அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.

மலேசியாவில் 2023ஆம் ஆண்டில் முட்டை ஏற்றுமதி மதிப்பு RM671.2 மில்லியனை எட்டியது மற்றும் பிராந்திய மட்டத்தில் சந்தை தேவையை பூர்த்தி செய்வதன் மூலம் ஊக்கமளிக்கும் செயல்திறனை தொடர்ந்து பதிவு செய்து வருகிறது என்றார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.