(ஆர்.ராஜா)
கோலாலம்பூர் டிச 26 - பூலோ நாடாளுமன்ற தொகுதியில் இவ்வாண்டு 38 லட்சம் வெள்ளி செலவில் நலத்திட்டங்கள் அமல்படுத்தப்பட்டுள்ளதாக தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ ஆர்.ரமணன் கூறினார்.
2024 ஆம் ஆண்டு முடிவடையும் தறுவாயில் பல்வேறு முயற்சிகளை வெற்றியடையச் செய்வதில் ஒத்துழைப்பு நல்கிய சுங்கை பூலோ நாடாளுமன்ற தொகுதி மக்களுக்கு தாம் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்று அவர் தமது முகநூலில் பதிவில் தெரிவித்தார்.
சுங்கை பூலோ நாடாளுமன்றத் தொகுதியில் இவ்வாண்டு மக்கள் நலத்திட்டங்களுக்கு 38 லட்சம் வெள்ளி ஒதுக்கப்பட்டுள்ளது.
*சமூக நட்புறவுத் திட்டம்
சமூகத்தின் வசதி மற்றும் பாதுகாப்பிற்காக உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கும் பராமரிப்பதற்கும் 20 லட்சம் வெள்ளி ஒதுக்கப்பட்டுள்ளது.
* சமூக நலத்திட்டம்
- நலன் சார்ந்த அம்சங்கள், குடியிருப்பாளர்களின் சுமையைக் குறைக்கவும் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்யவும்
357,834 வெள்ளி ஒதுக்கப்பட்டுள்ளது.
*பேரிடர் நிவாரணம்
- வெள்ளம் மற்றும் தீ விபத்துகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கு 263,550 வெள்ளி விநியோகிக்கப்பட்டது.
உதவி தேவைப்படும் மக்களுக்கு உணவு பொருட்கள், உளவியல் ஆதரவு மற்றும் குடியிருப்பு புனரமைப்பு ஆகியவை இதில் அடங்கும்.
* கல்வி
- புத்தாக்க பாடத்திட்ட அறிமுகம், தொழில்முறை ஆசிரியர் பயிற்சி மற்றும் கற்பித்தல் மற்றும் கற்றலில் தொழில்நுட்ப ஒருங்கிணைப்பு போன்ற கல்வித் திட்டங்களுக்கு 107,390 வெள்ளி பயன்படுத்தப்பட்டது.
* சமூக நிகழ்ச்சிகள்
- 180 தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு 957,637 வெள்ளி வழங்கப்பட்டது. வறுமை ஒழிப்பு, சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு முயற்சிகளை மேற்கொள்ளவும் இந்நிதி பயன்படுத்தப்பட்டது.
* வழிபாட்டுத்தலங்கள்
- பள்ளிவாசல் , சூராவ், கோவில் மற்றும் தேவாலயங்களுக்கு 140,509 வெள்ளி நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது.
அனைவரின் ஆதரவுக்கும் நன்றி. நாம் தொடர்ந்து ஒன்றாக முன்னேறுவோம்! என்று அவர் அப்பதிவில் குறிப்பிட்டுள்ளார்.


