கோத்தா பாரு, டிச 26: தும்பட்டில் உள்ள கம்போங் பூலாவ் உலார் வழியாக சட்டவிரோதமாக நாட்டிற்குள் நுழைந்ததாக சந்தேகத்தின் பேரில் 50 வயது கொண்ட தாய்லாந்து நபரை தென்கிழக்குப் படை அணியின் பொது நடவடிக்கைக் குழு (பிஜிஏ)
நேற்று கைது செய்தது.
தாய்லாந்திலிருந்து வந்த படகு ஒன்று குறிப்பிட்ட சட்டவிரோத தளத்தை நெருங்கி, காலை 11.30 மணியளவில் பாலத்தின் அடியில் பயணியை இறக்கிவிட்டதைக் கண்ட பிஜிஏ 8 பட்டாலியன் உறுப்பினர்களால் அந்நபர் கைது செய்யப்பட்டதாகக் PGA தென்கிழக்கு படைப்பிரிவின் கமாண்டர் டத்தோ நிக் ரோஸ் அஸ்ஹான் நிக் அப்துட் ஹமிட் கூறினார்.
“இருப்பினும், படகு ஓட்டுநர் தப்பிச் சென்றார். அதிகாரிகளின் வருகை உணர்ந்து பயணியை (சந்தேக நபரை) விட்டுச் சென்றார்.
"சந்தேக நபர் சோதனையின் போது செல்லுபடியாகும் பயண ஆவணங்களைக் காட்டத் தவறியதால், குடிவரவுச் சட்டம் 1959/63 இன் பிரிவு 5(2) இன் கீழ் விசாரணைக்காக பெங்கலன் குபோர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்" என்று டத்தோ நிக் ரோஸ் அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.
– பெர்னாமா


