ஷா ஆலம், டிச 26: RM20 அபராதக் கட்டணத்தைத் தவிர்ப்பதற்காக, 1/2025 மதிப்பீட்டு வரியை 2025 பிப்ரவரி 28க்குள் உடனடியாகச் செலுத்துமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.
தற்போது 1/2025 மதிப்பீட்டு வரிக்கான பில்லை விநியோகம் செய்யும் பணியில் கிள்ளான் மாநகராட்சி ஈடுபட்டுள்ளதாகக் கிள்ளான் மேயர் டத்தோ அப்துல் ஹமீட் ஹுசைன் கூறினார்.
"1/2025 மதிப்பீட்டு வரிக்கான பில்லை பொதுமக்கள் பெறவில்லை என்றால், ipay.mpklang.gov.my என்ற இணையதளம் மூலம் சரிபார்த்துக் கொள்ளலாம் அல்லது அருகிலுள்ள கிள்ளான் மாநகராட்சியின் கவுண்டரை நாடவும்.
"கியோஸ்க் மெஷின் கட்டணச் சேவை, இணைய பேங்கிங் மற்றும் ஜோம்பே (பில் குறியீடு: 5264) மூலமாகவும் பணம் செலுத்தலாம்" என்று அவர் கூறினார்
2025 ஆம் ஆண்டுக்குள் நிலுவைத் தொகையைச் செலுத்தும் நபர்கள் இலவச குடையைப் பெறுவதற்கான வாய்ப்பைப் பெற்றுள்ளதாக அப்துட் அமிட் மேலும் தெரிவித்தார்.
"எம்பிடிகே தலைமையகத்தில் உள்ள வருவாய் கவுண்டருக்கு கட்டண ரசீது கொண்டு வரும் முதல் 2,900 வரி செலுத்துவோருக்கு இந்த குடை வழங்கப்படும்," என்று அவர் கூறினார்.


