ஷா ஆலம், டிச 26: கடந்த வார நிலவரப்படி, ஷா ஆலம் அரங்கத்தை இடிக்கும் பணி 56.8 சதவீத்தை எட்டியுள்ளது என்று எம்பிஐ குழுமத்தின் தலைமை செயல் அதிகாரி தெரிவித்தார்.
கட்டிட இடிப்பின் முதல் கட்டம் திட்டமிட்டதை விட சீராகவும் வேகமாகவும் நடந்தது. அடுத்த ஆண்டு மே மாதத்தில் அதன் கட்டுமானம் பணி நடைபெறும் என டத்தோ சைபோலியாசன் எம் யூசோப் தெரிவித்தார்.
"புதிய ஷா ஆலம் அரங்கம் அமைப்பதற்கான பணிகள் நடந்து வருகின்றன," என்று அவரை தொடர்பு கொண்டபோது கூறினார்.
மூன்று கட்டங்களை உள்ளடக்கிய ஷா ஆலம் ஸ்டேடியம் காம்ப்ளக்ஸ் (KSSA) மேம்பாட்டுத் திட்டம் 2029 ஆம் ஆண்டளவில் முழுமையாக நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முதல் கட்டம் இடிப்பு நடவடிக்கையை உள்ளடக்கியது.
2027 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் மைதானங்கள், தெர்மினல்கள், பார்க்கிங் பிளாசாக்கள், பொழுதுபோக்கு பகுதிகள் மற்றும் பயிற்சி திடல்கள் அமைக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று டத்தோ மந்திரி புசார் கூறினார்.
2027 ஆம் ஆண்டின் மத்திலிருந்து 2029 ஆம் ஆண்டின் இறுதி வரை உள்ளரங்க கட்டிடம், வணிக இடம், விளையாட்டு பிரிவு மற்றும் இளைஞர் பிரிவு ஆகியவற்றின் கட்டுமானப் பணிகள் நடைபெறும் என டத்தோஸ்ரீ அமிருடின் கூறினார்.
மூன்றாம் கட்டத்திற்கான ஹோட்டல் கட்டுமானம் 2028 இல் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.


