NATIONAL

கஜகஸ்தான் விமான விபத்தில்  மலேசியர்கள் பாதிக்கப்படவில்லை - விஸ்மா புத்ரா

26 டிசம்பர் 2024, 5:21 AM
கஜகஸ்தான் விமான விபத்தில்  மலேசியர்கள் பாதிக்கப்படவில்லை - விஸ்மா புத்ரா

புத்ராஜெயா, டிச. 26 - நேற்று  அதிகாலை கஜகஸ்தானின் அக்டாவ் அனைத்துலக  விமான நிலையம் அருகே அஜர்பைஜான் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின்  ஜே2-8243 விமானம் விபத்துக்குள்ளான சம்பவத்தில் மலேசியர்கள் யாரும் பாதிக்கப்படவில்லை என்று

வெளியுறவு  அமைச்சு தெளிவுபடுத்தியது.

இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் இத்தகலை  உறுதிப்படுத்திய அமைச்சு,  உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொண்டதோடு  காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாகவும்  தெரிவித்தது.

தாங்கள் தொடர்ந்து நிலைமையை உன்னிப்பாகக் கவனித்து வருவதாகவும்

உதவி அல்லது கூடுதல் தகவலுக்கு மலேசியர்கள் 26 சரய்ஷிக் சாலை, இராஜதந்திர மாவட்டம், 010000 அஸ்தானா, கஜகஸ்தான் என்ற முகவரியில் உள்ள மலேசிய தூதரகத்தை அல்லது +7 (7172) 79 06 90, +7 (7172) 79 06 95, அல்லது +7 7701 0479 , அல்லது   mwastana@kln.gov.my. என்ற மின்னஞ்சல் மூலம்   தொடர்பு கொள்ளலாம் என்றும் விஸ்மா புத்ரா குறிப்பிட்டது.

பாகுவிலிருந்து க்ரோஸ்னிக்கு சென்று கொண்டிருந்த  அந்த  எம்ப்ரேயர் 190 ரக விமானம்,   அக்டாவ் அருகே அவசரமாக தரையிறங்கும் போது தீப்பிடித்து விபதாதுக்குள்ளானது.

இவ்விபத்தில் இரண்டு சிறார்கள் உட்பட குறைந்தபட்சம் 28 உயிர் பிழைத்த வேளையில் மேலும் பலர் உயிரிழந்ததாக அதிகாரிகள் அறிவித்தனர். அந்த விமானத்தில் 5 பணியாளர்கள் உட்பட மொத்தம் 67 பேர் இருந்தனர்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.