கோலாலம்பூர், டிச. 26 - கடந்த 1998ஆம் ஆண்டு தடுப்புக் காவலில் இருந்த
போது டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் கண்ணில் ஏற்பட்ட காயத்திற்கு
சிகிச்சை வழங்கிய கண் மருத்துவ நிபுணர் டாக்டர் அகமது சுக்ரி முகமது
நேற்று காலமானார்.
டாக்டர் அகமது சுக்ரியின் மறைவை பிரதமர் அன்வார் தனது சமூக ஊடக
கணக்கின் மூலம் நேற்றிரவு பகிர்ந்து கொண்டார்.
போலீஸ் காவலில் இருந்த போது தாம் சொந்தமாக காயத்தை ஏற்படுத்திக்
கொண்டதாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை மறுப்பதற்காக நடத்தப்பட்ட
அரச விசாரணையின் போது சாட்சியமளித்தவர்களில் டாக்டர் அகமது
சுக்ரியும் ஒருவர் என்று அன்வார் அப்பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
மறைந்த அன்னாரின் நேர்மை எனது நினைவை விட்டு ஒருபோதும்
அகலாது என்று அவர் தெரிவித்தார்.
மறைந்த டாக்டர் அகமது சுக்ரியின் குடும்பத்தினருக்கு அன்வார் தனது
இரங்கலையும் தெரிவித்துக கொண்டார்.


