கோலாலம்பூர், டிச. 25 - இன்று கிறிஸ்துமஸ் தினத்தைக் கொண்டாடும் மலேசியர்களுக்கு மாட்சிமை தங்கிய பேரரசர் சுல்தான் இப்ராஹிம் மற்றும் பேரரசியார் ராஜா ஜரித் சோபியா தம்பதியர் தங்களின் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டுள்ளனர்.
சுல்தான் இப்ராஹிம் சுல்தான் இஸ்கந்தர் முகநூல் பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்பட்ட போஸ்டர் மூலம் அவர்கள் வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.
கிறிஸ்துமஸ் தினத்தைக் கொண்டாடுபவர்களுக்கு இந்த பண்டிகை செழிப்பையும் மகிழ்ச்சியையும் தரட்டும் என்று மாமன்னர் தனது வாழ்த்துச் செய்தியில் கூறினார்.
பல்வேறு இன, மத மற்றும் கலாச்சாரங்களைக் கொண்ட மலேசிய சமூகம், நாட்டின் ஒற்றுமைக்கு அடித்தளமாக உள்ளது என்பதையும் அவர் வலியுறுத்தினர்.
கிறிஸ்துமஸ் பண்டிகை ஒவ்வோராண்டும் டிசம்பர் 25 அன்று உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்களால் கொண்டாடப்படுகிறது.


