கோலாலம்பூர், டிச. 24- கிறிஸ்துமஸ் கொண்டாட்ட தினமான நாளை சிலாங்கூர், நெகிரி செம்பிலான், சபா மற்றும் சரவாக் உள்ளிட்ட நான்கு மாநிலங்களில் காலை வேளையில் இடியுடன் கூடிய கன மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கெடா, பினாங்கு, சிலாங்கூர், கோலாலம்பூர், நெகிரி செம்பிலான், ஜோகூர், பகாங், திரங்கானு, கிளந்தான், சபா மற்றும் சரவாக் ஆகிய மாநிலங்களிலும் பிற்பகலில் இதே வானிலை நிலவும் என்று மலேசிய வானிலை ஆய்வுத் துறை தனது முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளது.
மேலும், ஜோகூர், பகாங், சபா மற்றும் சரவாக் ஆகிய இடங்களில் இரவில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தங்கள் பயணம் மற்றும் நன்கு திட்டமிடுமாறு வானிலை ஆய்வுத் துறை பொதுமக்களுக்கு நினைவூட்டுகிறது. மேலும், மலேசியாவில் சமீபத்திய மற்றும் துல்லியமான வானிலை தகவல்களுக்கு Google Play மற்றும் App Store வழியாக myCuaca செயலியை பதிவிறக்கவும் செய்யலாம்.


