கெய்ரோ, டிச. 24 - இவ்வாண்டு ஜூலை மாதம் ஈரானில் ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே கொல்லப்பட்டதற்கு தாங்களே பொறுப்பு என்பதை இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் நேற்று பகிரங்கமாக ஒப்புக்கொண்டார், காஸாவில் இஸ்ரேலின் போர் மற்றும் லெபனான் மோதலுக்கு மத்தியில் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில் இஸ்ரேலின் இந்த ஒப்புதல் தெஹ்ரானுக்கும் அதன் பரம எதிரியான இஸ்ரேலுக்கும் இடையிலான நெருக்கடியை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
அண்மைய நாட்களில், ஹூத்தி பயங்கரவாத அமைப்பு இஸ்ரேல் மீது ஏவுகணைகளை வீசிவரும் நிலையில் அவர்களுக்கு ஒரு தெளிவான செய்தியை தெரிவிக்க விரும்புகிறேன்: நாங்கள் ஹமாஸை தோற்கடித்துவிட்டோம். ஹெஸ்புல்லாவை வீழ்த்தினோம். ஈரானின் பாதுகாப்பு அமைப்புகளை முடமாக்கி உற்பத்தி முறையை சேதப்படுத்தியுள்ளோம். சிரியாவில் அசாட் ஆட்சியை வீழ்த்திவிட்டோம். தீமையின் அச்சுக்கு கடுமையான அடியைக் கொடுத்துள்ளோம். மேலும் கடுமையான அடியை எதிர்கொள்ளும் பட்டியலில் ஏமனில் உள்ள ஹவுதி பயங்கரவாத அமைப்பு கடைசியாக நிற்கிறது என்று காட்ஸ் கூறினார்
அவர்களின் விவேக முக்கியத்தும் வாய்ந்த உள்கட்டமைப்புகளை இஸ்ரேல் சேதப்படுத்தும். தெஹ்ரான், காஸா மற்றும் லெபனானில் ஹனியே, சின்வார் மற்றும் நஸ்ரல்லாவுக்கு செய்தது போல் நாங்கள் அவர்களின் தலைவர்களின் தலையை துண்டிப்போம் - ஹொடைடா மற்றும் சானாவில் இதனைச் செய்வோம் என்று பாதுகாப்பு படை வீரர்களை கெளரவிக்கும் நிகழ்வின் போது அவர் தெரிவித்தார்.
இஸ்ரேலின் மீது கடற்படை முற்றுகையைச் செயல்படுத்துவதற்காக ஒரு வருடத்திற்கும் மேலாக செங்கடலில் வணிகக் கப்பல்களை ஏமனில் உள்ள ஈரான் ஆதரவு குழு தாக்கி வருகிறது, காஸாவில் நிகழும் இஸ்ரேலின் ஓராண்டு காலப் போரில் பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவைப் புலப்படுத்துவதற்காக அவர் இந்த தாக்குதலை நடத்துகின்றனர் என்று அவர் கூறினர்.


