கோலாலம்பூர், டிச 24- இரு வாகனங்கள் சம்பந்தப்பட்ட சாலை விபத்தில்
ஆடவர் ஒருவர் பலியான வேளையில் மற்றொருவர்
காயங்களுக்குள்ளானார். இச்சம்பவம் உலு சிலாங்கூர், கோத்தோங்கில்
உள்ள உதவி போலீஸ் நிலையம் அருகே நேற்று காலை நிகழ்ந்தது.
இந்த விபத்து தொடர்பில் தமது தரப்புக்கு நேற்று காலை 10.05
மணியளவில் தகவல் கிடைத்ததாக சிலாங்கூர் மாநில தீயணைப்பு மற்றும்
மீட்புத் துறையின் நடவடிக்கைப் பிரிவு உதவி இயக்குனர் அகமது
முக்லிஸ் மொக்தார் கூறினார்.
தகவல் கிடைத்தவுடன் கோல குபு பாரு தீயணைப்பு மற்றும் மீட்பு
நிலையத்திலிருந்து மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
அங்கு டேயோத்தா கொரோலா மற்றும் கேம் பிளேசர்-எக்ஸ் ரக வேன்
சம்பந்தப்பட்ட விபத்து நிகழ்ந்துள்ளதை அவர்கள் கண்டனர்.
ஓட்டுநர் இருக்கையில் சிக்கிக் கொண்ட டோயோத்தா கோரோலா காரின்
ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டதை சுகாதார அமைச்சின்
மருத்துவக் குழுவினர் உறுதி செய்தனர் என்று அவர் குறிப்பிட்டார்.
காரில் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டிருந்த 58 வயதான தோ யோக் சாய்
என்ற அந்த ஓட்டுநரின் உடலை சிறப்பு உபகரணங்களைப் பயன்படுத்தி
மீட்ட தீயணைப்பு வீரர்கள் மேல் நடவடிக்கைக்காக அதை காவல்
துறையிடம் ஒப்படைத்தனர் என்று அவர் சொன்னார்.
தலையில் காயங்களுக்குள்ளான வேன் ஓட்டுநர் தலையில் ஏற்பட்ட
காயங்களுக்காக செலாயாங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்
என்றார் அவர்.


