பாலிக் பூலாவ் ,டிசம் 22 ;- கடந்த செவ்வாய்க்கிழமை இங்குள்ள கோலா சுங்கை பினாங்கின் நீரில் படகில் மிதந்த பின்னர் காணாமல் போன இரண்டு நண்பர்களும் ஆச்சேவில் பாதுகாப்பாக கண்டுப்பிடிக்கப் பட்டனர்.
முகமது இக்மல் ஹக்கீமி இஸ்மாயில் (22) மற்றும் அவரது நண்பர் நோர் ஹஸ்ருல் அப்துல்லா (25) ஆகியோரின் பாதுகாப்பு குறித்து பாதிக்கப் பட்டவர்களில் ஒருவரின் தந்தை இஸ்மாயில் ஜகாரியா (51) உறுதிப்படுத்தினார்.
தனது மகனின் பாதுகாப்பு நலன் பற்றிய தகவல்களை பெற்றதாக அவர் கூறினார், அவர் கற்றல் சிரமங்களுடன் ஒரு மாற்றுத்திறனாளி (OKU) என்றும் வகைப்படுத்தப்படுகிறார்.
"மசூதி குழுத் தலைவரால் தெரிவிக்கப் படுவதற்கு முன்பு இந்த கண்டுபிடிப்பு குறித்து காவல் துறையிடமிருந்து எனக்கு அழைப்பு வந்தது".அவர்கள் இந்தோனேசியாவின் ஆச்சேவில் மீனவர்களால் மீட்கப்பட்டதாகவும், இப்போது பாதுகாப்பாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.
"என்னால் இன்னும் ஹக்கிமியை தொடர்பு கொள்ள முடியவில்லை, ஆனால் பெறப்பட்ட படங்களிலிருந்து, அவரது தோல் சற்று கருத்து இருந்தாலும், அவர் நல்ல நிலையில் இருப்பதாகத் தெரிகிறது" என்று டெய்லி நியூஸ் இன்று தொடர்பு கொண்டபோது அவர் கூறினார்.
தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைக்கு உதவிய சக மீனவர்கள் உட்பட சம்பந்தப்பட்ட அனைத்து ஏஜென்சிகளுக்கும் இஸ்மாயில் நன்றி தெரிவித்தார்.
"அவர்கள் இருவரையும் எப்போது திருப்பிக் கொண்டு வருவார்கள் என்று எனக்குத் தெரியவில்லை, அதிகாரிகளிடமிருந்து தகவல்களுக்காக நாங்கள் இன்னும் காத்திருக்கிறோம்" என்று அவர் கூறினார்.
இதற்கிடையில், பாதிக்கப்பட்டவர்களின் கண்டுபிடிப்பு தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று பிற்பகல் நடைபெறும் என்று தென்மேற்கு மாவட்ட காவல் துறைத் தலைவர், உதவி ஆணையர் சஸாலி ஆடம் தெரிவித்தார்.
முன்னதாக, இரவு 11:30 மணியளவில் கோல சுங்கை பினாங்கின் நீரில் படகு மிதந்த பின்னர் இருவரும் காணாமல் போனதாக ஊடகங்கள் தெரிவித்தன.
ஐந்தாம் நாளுக்குள் நுழைந்த எஸ். ஏ. ஆர் தேடும் நடவடிக்கை, எந்த தடயமும் கிடைக்காததால் நேற்று நிறுத்தப்பட்டது.


