போதை பானம் அல்லது போதைப்பொருள்களை உட்கொண்டு வாகனம் ஓட்டியது தொடர்பான விசாரணைக்கு உதவும் பொருட்டு 37 வயதான புரோட்டான் வீரா காரின் ஓட்டுநர் 1987 ஆம் ஆண்டு சாலைப் போக்குவரத்துச் சட்டத்தின் 44(1ஏ) பிரிவின் கீழ் தடுத்து வைக்கப் பட்டுள்ளார் என்று கெமாமன் மாவட்ட காவல் துறைத் தலைவர் டிஎஸ்பி வான் முகமது வான் ஜாபர் தெரிவித்தார்.
இந்த விபத்து குறித்து காவல்துறைக்கு நேற்று காலை 8.30 மணிக்கு தகவல் கிடைத்தது. சுக்காய் நகரிலிருந்து கெர்த்தே நோக்கி 30 வயதுடைய பெண் ஒருவர் ஓட்டிச் சென்ற புரோட்டான் பெர்சோனா ரக காரின் பின்புறத்தில் அந்த நபரின் கார் மோதியது முதற்கட்ட விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது என அவர் குறிப்பிட்டார்.
இதன் காரணமாக பெண்ணின் கார் சாலையிலிருந்து விலகி இரும்புத் தடுப்பில் மோதி புதருக்குள் நுழைந்தது. இந்த விபத்தால் ஏற்பட்ட நெஞ்சு வலி காரணமாக மேல் சிகிச்சைக்காக அப்பெண் கெமாமான் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார். அதே நேரத்தில் அந்த நபரின் நெற்றியிலும் உதடுகளிலும் சிறிய வெட்டுக்கள் மட்டுமே ஏற்பட்டன என்று அவர் ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
மோர்பின் வகை போதைப் பொருளைப் பயன்படுத்தியதற்காக 1952 ஆம் ஆண்டு அபாயகர போதைப் பொருள் சட்டத்தின் பிரிவு 15(1)(ஏ) பிரிவின் கீழும் அவ்வாடவர் மீது விசாரணை நடத்தப்படுவதாகவும் அவர் சொன்னார்.


