ஜோகூர் பாரு, டிச. 20: போலி முதலீட்டால் ஏமாற்றப்பட்ட வர்த்தகர் ஒருவர் 500,000 ரிங்கிட் இழந்தார்.
இச்சம்பவம் தொடர்பாக 45 வயதான உள்ளூர் நபர் நேற்று காவல்துறையில் புகார் அளித்தார் என கூலாய் மாவட்ட காவல் துறைத் தலைவர் ஏசிபி தான் செங் லீ கூறினார்.
இந்த முதலீட்டுச் சலுகை முகநூலில் விளம்பரப்படுத்தப் பட்டதாகவும், மூன்று நாட்களுக்குள் மூன்று முதல் 120 சதவிகிதம் வரை லாபம் கிடைக்கும் மற்றும் 'கேப் மேக்ஸ்' எனப்படும் செயலி மூலம் லாபத்தைச் சரிபார்க்கலாம் என்றும் தெரிவிக்கப் பட்டதாக பாதிக்கப் பட்டவர் கூறினார்.
"இந்த சலுகையால் ஈர்க்கப் பட்ட பாதிக்கப் பட்டவர் நவம்பர் 25 முதல் டிசம்பர் 12 வரை நான்கு உள்ளூர் வங்கிக் கணக்குகளுக்கு RM544,200 உள்ளடக்கிய
ஏழு பணப் பரிவர்த்தனைகளை செய்தார்," என்று தான் செங் அறிக்கை ஒன்றின் மூலம் தெரிவித்தார்.
9.4 மில்லியன் ரிங்கிட் லாபத்தை திரும்பப் பெறத் தவறியதால், தான் ஏமாற்றப் பட்டதை பாதிக்கப் பட்டவர் உணர்ந்தார். மேலும், அவரின் கணக்கும் முடக்கப் பட்டது.
குற்றவியல் சட்டப் பிரிவு 420 ன் கீழ் இந்த வழக்கு விசாரிக்கப் படுகிறது.
- பெர்னாமா


