ஷா ஆலம், டிச 20: அடுத்த ஆண்டு சிலாங்கூர் மாநில சட்டமன்ற (டிஎன்எஸ்)அமர்வு பிப்ரவரி 18 ஆம் தேதி தொடங்க உள்ளது.
அந்த அமர்வை சிலாங்கூர் சுல்தான் அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைப்பார் என டிஎன்எஸ் சபாநாயகர் லாவ் வெங் சான் தெரிவித்தார்.
"நாங்கள் நோன்பு மாதத்திற்கு (ரம்ஜான்) ஏற்றவாறு இந்த அமர்வை நடத்த விரும்புகிறோம்.அதனால், நோன்பு மாதத்தைத் தவிர்க்க முயற்சிக்கிறோம்.
"வழக்கம் போல் அமர்வு ஆண்டுக்கு மூன்று முறை கூடும். ஒவ்வொரு அமர்வும் 10 நாட்கள் நீடிக்கும்," என்று அவர் கூறினார்.
அமர்வின் மையமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப் படும் பிரச்சனைகளில் வெள்ளமும் ஒன்றாகும்.
முன்னதாக, 15வது சிலாங்கூர் மாநில சட்டமன்ற அமர்வின் மூன்றாவது கூட்டத்தில் அனைத்து மாநில சட்டமன்ற உறுப்பினர்களின் விவாத செயல்திறனில் திருப்தி அடைவதாக வெங் சான் கூறினார்.
104 வாய்மொழி கேள்விகளுக்கு வெற்றிகரமாகப் பதிலளிக்கப் பட்டதுடன் ஒன்பது பிரேரணைகள் அங்கீகரிக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.


