ஷா ஆலம், டிச 20: கடந்த செவ்வாய்க்கிழமை மீன்பிடிக்கச் சென்றபோது பிந்து கெடோங் தீவுக்கு அருகே காணாமல் போனதாகக் கூறப்படும் உள்ளூர் ஆண்கள் இருவர் பாதுகாப்பாக கண்டு பிடிக்கப் பட்டனர்.
மத்திய பிராந்திய கடல்சார் துறையின் தகவலின் அடிப்படையில் பிந்து கெடோங் தீவுக்கு மேற்கே 19.8 கடல் மைல் தொலைவில் பிற்பகல் 3.45 மணியளவில் இருவரும் கவிழ்ந்த ஜெட் ஸ்கையுடன் கண்டு பிடிக்கப் பட்டனர் என சிலாங்கூர் கடல்சார் இயக்குனர் இயக்குனர் அப்துல் முஹைமின் முகமட் சலே அறிக்கை ஒன்றின் மூலம் தெரிவித்தார்.
"அதைத் தொடர்ந்து, ஜோகூர் பாரு கடல்சார் மீட்பு துணை மையம் (MRSC) டிசம்பர் 18 ஆம் தேதி அதிகாலை 2 மணிக்கு தேடல் மற்றும் மீட்பு நடவடிக்கையை (CARILAMAT) தொடங்கியது," என்று அவர் கூறினார்.
பாதிக்கப்பட்ட இருவரும் போர்ட் கிள்ளானில் உள்ள பூலாவ் இண்டா கடல்படையினரின் (பிபிஎம்) ஜெட்டிக்கு அழைத்துச் செல்லப்பட்டு நேற்று இரவு 8.35 மணியளவில் பாதுகாப்பாக வந்து சேர்ந்ததாக அவர் கூறினார்.


