புத்ராஜெயா, டிச.19 - பள்ளி விடுமுறையை முன்னிட்டு நாடு முழுவதும் உள்ள குடிநுழைவுத் துறையின் கடப்பிதழ் வழங்கும் அலுவலகங்களின் பணி நேரம் சனிக்கிழமை தொடங்கி டிசம்பர் 28 வரை மூன்று மணி நேரம் நீட்டிக்கப்பட்டு இரவு 8.00 மணி வரை செயல்படும்.
ஜொகூர், கெடா, கிளந்தான் மற்றும் திரெங்கானு மாநிலங்கள் தவிர இதர அனைத்து மாநிலங்களில் டிசம்பர் 23 முதல் 26 வரை காலை 8.00 மணி தொடங்கி இரவு 8.00 மணி வரை அந்த அலுவலகங்கள் திறந்திருக்கும் என்று அத்துறை தனது என அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் வெளியிட்ட அறிக்கை ஒன்றில் தெரிவித்தது.
அதே சமயம், டிசம்பர் 21, 27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் பணி நேரம் காலை 8.00 மணி முதல் மாலை 3.09 மணி வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், ஜொகூர், கெடா, திரங்கானு மற்றும் கிளந்தான் ஆகிய மாநிலங்களில் உள்ள கடப்பிதழ் வழங்கும் அலுவலகங்கள் டிசம்பர் 22 முதல் 24 வரை காலை 8.00 மணி தொடங்கி இரவு 8.00 மணி வரை செயல்படும்.
அதே சமயம், 21 மற்றும் 28 ஆம் தேதிகளில் காலை 8.00 மணி முதல் மாலை 3.00 மணியிலும் 26 ஆம் தேதி காலை 8.00 மணி முதல் மாலை 6.30 மணி வரையிலும் அலுவலகங்கள் செயல்படும்
எங்களின் இந்த பணி நீட்டிப்பு உங்கள் பணிகளை எளிதாக்கும் என்று நாங்கள் நம்புகிறோம் என்று அந்த அறிக்கையில் குடிநுழைவுத் துறை கூறியது.


