கோலாலம்பூர், டிச. 19 - இவ்வாண்டு செப்டம்பர் மாதம் வரை 30 கோடியே
20 லட்சம் வெள்ளி மதிப்பிலான சட்டவிரோத மற்றும் சந்தேகத்திற்குரிய
பணப்பரிவர்த்தனைகளை நாட்டிலுள்ள நிதிக் கழகங்கள் முடக்கியுள்ளன.
இணைய வழி வங்கி பயன்பாட்டில் பயனீட்டாளர்களின் பாதுகாப்பை
உறுதி செய்வதற்கு ஏதுவாக பேங்க் நெகாராவின் மேற்பார்வையில் நிதிக்
கழகங்கள் அமல்படுத்திய ஐந்து முதன்மை தடுப்பு நடவடிக்கைளின்
வாயிலாக இந்த நேர்மறையான பலன் கிடைத்ததாக துணை நிதியமைச்சர்
லிம ஹூய் யிங் கூறினார்
கடந்த 2023ஆம் ஆண்டு 38 கோடியே 30 லட்சம் வெள்ளி மதிப்பிலான
சட்டவிரோத மற்றும் சந்தேகத்திற்குரிய பரிவர்த்தனைகளையும்
இவ்வாண்டு செப்டம்பர் வர 30 கோடியே 20 லட்சம் வெள்ளி மதிப்பிலான
பரிவர்த்தனைகளும் வெற்றிகரமாக முடக்கப்பட்டன.
டாட்டா பிஷிங் எனப்படும் சட்டப்பூர்வ நிறுவனத்தின் மின்னஞ்சல் என
அடையாளப்படுத்திக் கொண்டு தரவுகளைத் திருடுவது, ஹசாட் அல்லது
தீங்கிழைக்கும் மென்பொருள் தொடர்பான குற்றங்களின் எண்ணிக்கையும்
60 விழுக்காடு குறைந்துள்ளதாக மேலவையில் இன்று கேள்வி நேரத்தின்
போது அவர் தெரிவித்தார்.
இணையம் வழி வங்கி நடவடிக்கைகளை மேற்கொள்ளும்
பயனீட்டாளர்களின் பாதுகாப்பு தொடர்பில் அரசாங்கம் அளிக்கும்
உத்தரவாதம் குறித்து செனட்டர் டத்தோ போபி சுயேன் எழுப்பிய
கேள்விக்கு அவர் இவ்வாறு பதிலளித்தார்.
சட்டவிரோத மற்றும் சந்தேகத்திற்கிடமான பரிவர்த்தனைகளை
அடையாளம் காண்பதற்கு ஏதுவாக பல்வேறு கூடுதல் நடவடிக்கைகளின்
வழி இணைய வங்கி முறையை அரசாங்கம் தொடர்ந்து வலுப்படுத்தி
வரும் என்றும் அவர் சொன்னார்.
இணையச் சேவையில் இடையூறை எதிர்நோக்கும் வங்கிகள் அதற்கான
மூல காரணத்தைக் கண்டறிவதற்கான நடவடிக்கைளை விரைந்து
எடுக்கும்படியும் அவர் கேட்டுக் கொண்டார்.


