புத்ராஜெயா,டிச 19: கஞ்சா வகை போதைப்பொருள் வைத்திருந்ததாக சந்தேகத்தின் பேரில் சமீபத்தில் கைது செய்யப்பட்ட உள்ளூர் பிரபலத்தின் தடுப்பு காவலுக்கான காலம் இந்த ஞாயிற்றுக்கிழமை வரை நான்கு நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது என்று சிப்பாங் மாவட்ட காவல் துறைத் தலைவர் ஏசிபி நோரிசாம் பஹாமன் தெரிவித்தார்.
41 வயதான நபரின் தடுப்புக் காவலுக்கான காலம் இன்றுடன் முடிவடைந்ததைத் தொடர்ந்து,அதை தொடர்வதற்கான செயல்முறை மேற்கொள்ளப்பட்டதாக நோரிசாம் கூறினார்.
"இந்த பிரபலத்தின் தடுப்பு காவல் நான்கு நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இன்று இந்த வழக்கு மாஜிஸ்திரேட் முகமட் புகாரிக்கு பரிந்துரைக்கப்பட்டது," என்று அவர் அறிக்கை ஒன்றின் மூலம் தெரிவித்துள்ளார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை, சிப்பாங் மாவட்ட காவல்துறை தலைமையகத்தின் போதைப் பொருள் குற்றப் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த உறுப்பினர்கள் மதியம் 3.10 மணியளவில் சைபர்ஜெயாவில் உள்ள வீடு ஒன்றில் நடத்திய சோதனையில் கஞ்சா வகை போதைப்பொருள் வைத்திருந்ததாக சந்தேகிக்கப்படும் ஆண் பிரபலம் கைது செய்யப்பட்டார்.
சிறுநீர் பரிசோதனையில் அந்நபர் டெட்ராஹைட்ரோகன்னாபினால்(THC) என்ற
போதை பொருளை உட்கொண்டு இருப்பது கண்டறியப்பட்டது.
இந்த வழக்கு ஆபத்தான போதைப்பொருள் சட்டம் 1952 பிரிவு 39A(2)ன் கீழ் விசாரிக்கப்பட்டு வருகிறது.
- பெர்னாமா


