செர்டாங், டிச.19: நேற்று ஆறாம் ஆண்டு மாணவர் ஒருவர் பள்ளியில் மின்சாரம் தாக்கி இறந்துள்ளார்.
மாலை 6.30 மணியளவில் இந்தச் சம்பவம் தொடர்பான புகார் கிடைத்ததாக செர்டாங் மாவட்ட காவல்துறைத் தலைவர், உதவி ஆணையர் ஏ.ஏ.அன்பழகன் கூறினார்.
"பாதிக்கப்பட்ட மாணவர் செர்டாங் பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் மின்சாரம் தாக்கியதால் உயிரிழந்ததாக நம்பப்படுகிறது.இச்சம்பவம் தொடர்பான விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் அவர் கூறினார்.
“சம்பவத்திற்கான காரணத்தை அடையாளம் காண, பாதிக்கப்பட்டவரின் உடலில் நடத்தப்பட்ட பிரேதப் பரிசோதனை அறிக்கைக்காக காவல்துறை இன்னும் காத்திருக்கிறது.
"இந்த வழக்கு திடீர் மரணம் (SDR) என வகைப்படுத்தப்பட்டது," என்று ஏ.ஏ.அன்பழகன் கூறினார்.
விசாரணைக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் கருத்துக்களை வெளியிட வேண்டாம் என பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.


