ஷா ஆலம், டிச 18: நேற்று தொடங்கிய துப்புரவு நடவடிக்கையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கிளந்தானில் தும்பாட் மாவட்டத்தில் உள்ள தாமான் ஸ்ரீ பாயு மற்றும் தாமான் ஸ்ரீ டாலாம் ரு ஆகிய இடங்களில் 90.75 டன் வெள்ளக் கழிவுகளை ஏஹ்சான் மடாணி பணிபடை சேகரித்தது.
துப்புரவுப் பணியில் 130 பணியாளர்கள் ஈடுப்பட்டனர் மற்றும் பல்வேறு மாநில அரசு நிறுவனங்களிலிருந்து பெறப்பட்ட 11 'ரோல் ஆன் ரோல் ஆஃப்' (ரோரோ) தொட்டிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன என மாநில பேரிடர் மேலாண்மைப் பிரிவு (UPBN)தெரிவித்தது
"கேடிஇபி கழிவு மேலாண்மை (கேடிஇபிடபிள்யூஎம்), பிபிடி, சிலாங்கூர் தன்னார்வ குழு(சேர்வ்) மற்றும் டீம் சிலாங்கூர் ஆகியவற்றின் உறுப்பினர்கள் ஈடுப்பட்ட 38 ரோந்துகளை உள்ளடக்கிய நடவடிக்கை பிற்பகல் 3 மணிக்கு நிறைவடைந்தது.
கடந்த திங்கட்கிழமை, வெள்ளத்திற்குப் பிந்தைய நடவடிக்கைகளுக்காக கிளந்தானுக்கு பிபிடி உறுப்பினர்கள் மற்றும் தன்னார்வலர்களைக் கொண்ட ஏஹ்சான் மடாணி அணியை மாநில அரசு அனுப்பும் என டத்தோ மந்திரி புசார் அறிவித்தார்.
டேங்கர்கள் மற்றும் ரோரோ லாரிகள் உட்பட 45 இயந்திரங்களுடன் 130 நபர்கள் அடங்கிய குழு செவ்வாய்க்கிழமை முதல் வியாழக்கிழமை வரை துப்புரவுப் பணிகளை மேற்கொள்வதாக அனுப்பப்படும் என டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி தெரிவித்தார்.
இக்குழு பாதிக்கப்பட்ட பொது உள்கட்டமைப்பை சுத்தம் செய்வதில் அதிக கவனம் செலுத்தியது என்று அவர் விளக்கினார்.
முன்னதாக, கெடா, கிளந்தான், திரங்கானு மற்றும் ஜோகூர் ஆகிய இடங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ சிலாங்கூர் உதவிக் குழுக்களையும் அனுப்பியது.


