ஷா ஆலம், டிச. 18: இதுவரை 7,000 சிலாங்கூர் குடிமக்கள் இலவச சுகாதாரப் பரிசோதனை மேற்கொண்டுள்ளனர். அவர்களில் 38 சதவீதம் பேர் 46 முதல் 64 வயதுடையவர்கள் ஆவர்.
மாநில அரசு ஏற்பாடு செய்திருந்த இலவச பல் பரிசோதனை யில் அக்டோபர் 31ஆம் தேதி வரை 3,867 பேர் பங்கேற்றதாக டத்தோ மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.
"இத்திட்டத்தை மேலும் விரிவுபடுத்த, மாநில அரசு முதியோருக்கான சிறப்பு சுகாதார பரிசோதனை திட்டத்தையும் செயல்படுத்தியது.
"இந்த முயற்சியானது மாநிலத்தில் நீண்ட கால தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நாங்கள் நம்புகிறோம். மேலும் பலர் இந்த இலவச சுகாதார பரிசோதனையில் பங்கேற்பார்கள் என்று நாங்கள் பெரிதும் எதிர் பார்க்கிறோம்," என்று அவர் முகநூல் மூலம் தெரிவித்தார்.
சிலாங்கூர் பட்ஜெட் 2025 இல் ஒதுக்கப்பட்ட ரிம 2 மில்லியன் மூலம் இலவச சுகாதார பரிசோதனை திட்டம் தொடரும் என்று அமிருடின் அறிவித்தார்


