ஈப்போ, டிச. 18: ஊத்தான் மெலிந்தாங்கில் உள்ள TSL Fishery, சுங்கை பேராக் ஜெட்டியில் படகில் இருந்து விழுந்ததாகக் கூறப்பட்ட மீனவர் ஒருவர், நீரில் மூழ்கி உயிரிழந்தார்
30 வயதான இங் கா வான் என்பவரின் சடலம் 5.6 கிலோ மீட்டர் அல்லது மூன்று கடல் மைல் தொலைவில் நேற்று பிற்பகல் கண்டெடுக்கப் பட்டது.
தெலுக் இந்தானைச் சேர்ந்த 18 தீயணைப்பு வீரர்கள், 16 காவல்துறையினர், 7 குடிமைத் தற்காப்பு படையினர் மற்றும் தன்னார்வ தீயணைப்புப் படை (PBS) பாதிக்கப் பட்ட வரை தேடும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர் என பேராக் மலேசிய தீயணைப்பு மற்றும் மீட்பு துறை (JBPM) செயல் பாட்டுப் பிரிவின் உதவி இயக்குநர் சபரோசி நோர் அகமட் தெரிவித்தார்.
"பாதிக்கப் பட்டவரின் உடலை குடும்ப உறுப்பினர்கள் அடையாளம் காணவும், மேல் நடவடிக்கைக்காகவும் காவல்துறையிடம் ஒப்படைக்கப் பட்டது.
“மீட்பு நடவடிக்கை நேற்று பிற்பகல் 5.40 மணிக்கு முழுமையாக முடிவடைந்தது,” என்று அவர் அறிக்கை ஒன்றின் மூலம் தெரிவித்தார்
– பெர்னாமா


