கோலா திரங்கானு, டிச.18: வாட்ஸ்அப் செயலி செய்தி மூலம் போலி முதலீட்டுத் திட்டத்தில் கவரப்பட்ட கடை மேலாளர் RM81,050 இழந்தார்.
ஏப்ரல் 27 அன்று,பாதிக்கப்பட்ட 46 வயது ஆணுக்கு அடையாளம் தெரியாத பெண் ஒருவரால் பங்கு முதலீட்டுத் திட்டம் பற்றி தெரிய வந்தது என கோலா திரங்கானு மாவட்ட காவல் துறைத் தலைவர் அஸ்லி முகமட் நோர் தெரிவித்தார்.
சந்தேக நபர் பாதிக்கப் பட்டவரை வற்புறுத்தியதாகவும், 400 சதவீதம் வரை லாபம் தருவதாக உறுதியளித்ததாகவும் அவர் கூறினார்.
இந்த வாய்ப்பால் ஏமாற்றப்பட்ட பாதிக்கப் பட்டவர் கடந்த ஆண்டு மே 1 முதல் 22 வரை மொத்தம் 81,050 ரிங்கிட் மதிப்பிலான பரிவர்த்தனைகளை மேற்கொண்டுள்ளார்.
முதலீட்டு வருமானத்தைப் பெற முயன்ற பாதிக்கப் பட்டவர், முதலீடுகளை கண்காணிக்க உருவாக்கப்பட்ட வாட்ஸ்அப் குழுவிலிருந்து வெளியேற்றப் பட்டதாகக் கூறினார்.
"தாம் ஏமாற்றப் பட்டதை உணர்ந்த பாதிக்கப்பட்டவர் நேற்று காலை புகார் அளித்துள்ளார். குற்றவியல் சட்டம் பிரிவு 420 இன் கீழ் வழக்கு விசாரிக்கப்பட்டது," என்று அஸ்லி முகமட் அறிக்கை ஒன்றின் மூலம் தெரிவித்தார்.
– பெர்னாமா


