ஹாங்காங், டிச. 17 - அதிக வெளிநாட்டினரை கவர்ந்திழுக்க விசா இல்லாத டிரான்சிட் கொள்கையை தளர்த்துவதாக சீனா அறிவித்துள்ளது.
இதன்வழி தற்போது 72-144 மணி நேரமாக இருக்கும் வெளிநாடாடுப் பயணிகளுக்கான தங்கும் அனுமதியை 240 மணி நேரமாக அல்லது பத்து நாட்களாக அது நீட்டிக்கவுள்ளது.
இந்த நடைமுறை உடனடியாக அமலுக்கு வருவதாக தேசிய குடியேற்ற நிர்வாகம் (என்.ஐ.ஏ.) அதன் அதிகாரப்பூர்வ விசாட் கணக்கின் வழி அறிவித்தது.
ரஷ்யா, பிரேசில், இங்கிலாந்து, அமெரிக்கா கனடா உள்ளிட்ட 54 நாடுகளைச் சேர்ந்தவர்கள், சீனாவிலிருந்து மூன்றாவது நாட்டிற்கு செல்லும் பட்சத்திலு 24 மாநிலங்களில் உள்ள 60 பொது நிலை துறைமுகங்கள் வாயிலாக விசா இல்லாமல் சீனாவுக்குள் நுழைந்து 240 மணி நேரம் வரை தங்கலாம் என்று அது கூறியது.
கோவிட்-19 நோய்த்தொற்று பரவல் காரணமாக மூன்று வருடங்கள் சுயமாகத் தனிமைப்படுத்திக் கொண்ட பிறகு கடந்த 2023 ஆம் ஆண்டில் சீனா தனது எல்லைகளை மீண்டும் திறந்தது.
உலகின் இரண்டாவது பெரிய பொருளாதார வல்லரசான சீனா, தனது நாட்டிற்கு வருகை தருவதை ஊக்குவிக்க பயணிகளுக்கான விசா தேவைகளைத் தள்ளுபடி செய்துள்ளது.
அமைச்சகம், சீனா தனது விசா இல்லாத கொள்கையை மொத்தம் 38 நாடுகளுக்கு விரிவுபடுத்தியதாகக் அந்நாட்டு வெளியுறவு அமைச்சு கடந்த நவம்பர் மாதம் கூறியது.
ஸ்பெயின், சிங்கப்பூர் மற்றும் நெதர்லாந்து உள்ளிட்ட இந்த நாடுகளைச் சேர்ந்தவர்கள், சீனாவிற்குள் நுழைவதற்கு விசா தேவையில்லை, வணிகம், சுற்றுலா, குடும்ப வருகை, பரிமாற்றம் மற்றும் போக்குவரத்து நோக்கங்களுக்காக 30 நாட்கள் வரை தங்கலாம்.


