மலாக்கா, டிச.17: இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு 'டத்தோஸ்ரீ' பட்டம் பெற தனிநபரிடம் 375,000 ரிங்கிட் லஞ்சம் வாங்கிய வழக்கின் விசாரணையில் தனியார் நிறுவன மேலாளருக்கு இன்று முதல் 3 நாட்களுக்கு தடுப்பு காவல் பிறப்பிக்கப்பட்டது.
54 வயதுடைய நபருக்கு எதிரான விளக்கமறியல் உத்தரவை மஜிஸ்திரேட் நபிலா நிஜாம் பிறப்பித்துள்ளார்.
சந்தேக நபர் நேற்று மாலை 5.10 மணியளவில் மாநில எம்ஏசிசி அலுவலகத்தில் சாட்சியம் அளிக்க வந்த போது,எம்ஏசிசி சட்டம் 2009 பிரிவு 16(ஏ)(ஏ) இன் கீழ் வழக்கு விசாரணைக்கு உதவ கைது செய்யப்பட்டதாக மலாக்கா மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் (எம்ஏ சிசி) இயக்குனர் அடி சுபியான் ஷஃபி தெரிவித்தார்.
"டிசம்பர் 19 வரை தடுப்பு காவல் உத்தரவைப் பெறுவதற்காக அந்நபர் இன்று ஆயர் கெரோ மாஜிஸ்திரேட் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டார்," என்று அடி சுபியான் கூறினார்.
பிரிவு 16(a)(A)எம்ஏசிசி சட்டம் 2009, குற்றம் நிரூபிக்கப்பட்டால் லஞ்சத்தின் மதிப்பை விட ஐந்து மடங்கு அபராதம் அல்லது RM 10,000 மற்றும் 20 ஆண்டுகளுக்கு மிகாமல் சிறைத்தண்டனையும் விதிக்கப்படும்.
- பெர்னாமா


