ஷா ஆலம், டிச 17: இந்திய சமுதாய மேம்பாட்டிற்கு குறிப்பாக வர்த்தக சமூகம் தொடர்ந்து வளர்ச்சி அடைய முன்னுரிமை வழங்கி வரும் தொழில் முனைவோர் மேம்பாடு கூட்டுறவு துறை துணை அமைச்சர் டத்தோ ஶ்ரீ ரமணன் அவர்களுக்கு பாராட்டு தெரிவிப்பதாக செந்தோச சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் குணராஜ் கூறினார்.
இந்திய சமுகத்திற்காக கடந்த ஓராண்டில் பல திட்டங்கள் அறிமுகம் செய்யப் பட்டுள்ளன. அதில் தெக்குன் ஸ்பூமி திட்டத்தின் கீழ் கூடுதலாக வெள்ளி 30 மில்லியன், அமானா இக்திபார் திட்டத்தின் மூலம் வெள்ளி 50 மில்லியன், பேங்க் ராக்யாட்டின் I - BRIEF திட்டத்தின் வழி வெள்ளி 50 மில்லியன்,இந்தியர் சிறு தொழில் வளர்ச்சி திட்டதிற்கு வெள்ளி 6 மில்லியன் என நிதி ஒதுக்கப்பட்டது.
இம்முயற்சிகள் அனைத்தும் பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வாரின் மடாணி கொள்கைக்கு ஏற்ப மேற்கொள்ளப்பட்டுள்ளன. இத்திட்டங்கள் வாயிலாக கிட்டத்தட்ட 10,000 இந்திய தொழில்முனைவர்கள் பயனடைந்துள்ளனர்.
இது ஒரு மகத்தான சாதனையாகும். துணை அமைச்சராகப் பொறுப்பேற்று ஓராண்டை நிறைவு செய்துள்ள டத்தோ ஶ்ரீ ரமணனுக்கு இந்திய சமுதாய பொருளாதார மேம்பாட்டிற்காக தொடர்ந்து செயல் படவும், மேலும் சிறப்படையவும் செந்தோசா தொகுதி மக்களின் சார்பில் மீண்டும் வாழ்த்து தெரிவிப்பதாக டாக்டர் குணராஜ் தனது வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார்.


