அப்பகுதியில் மீண்டும் சரிவு ஏற்பட வாய்ப்புகள் இருப்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கண்காணிப்பு மேற்கொள்ளப்படுவதாக கிளந்தான் தீயணைப்புத் துறையின் நடவடிக்கைப் பிரிவு உதவி இயக்குநர் முகமது வில்டன் அஸ்ஹாரி கூறினார்.
மண்சரிவு ஏற்பட்ட பகுதியைக் கோத்தா பாரு தீயணைப்பு நிலையம் அணுக்கமாக கண்காணிக்கும். அதேவேளையில் அந்த அபாயப் பகுதியை நெருங்க வேண்டாம் என்று பொதுமக்களை எச்சரிக்கும் வகையில் பாதுகாப்பு நாடாவை தீயணைப்புத் துறை பொருத்தியுள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.
பாதிக்கப்பட்ட பகுதிக்கு அருகில் செல்ல வேண்டாம் என்று தீயணைப்புத் துறை பொதுமக்களுக்கு அறிவுறுத்துகிறது. ஏனெனில் மண் நகர்வு பொதுமக்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என்று அவர் இன்று பெர்னாமாவிடம் கூறினார்.


