ஷா ஆலம், டிச. 17- கிளந்தான், திரங்கானு மற்றும் பகாங் ஆகிய
மாநிலங்களில் எச்சரிக்கை அளவில் தொடர்ச்சியாக மழை பெய்யும் என்று
மலேசியா வானிலை ஆய்வுத் துறை எச்சரித்துள்ளது.
பகாங் மாநிலத்தின் ஜெராண்டூட். மாரான், பெக்கான், ரொம்பின் ஆகிய
மாவட்டங்களிலும் இதே நிலை நீடிக்கும் என அது தனது பேஸ்புக்
பதிவில் கூறியுள்ளது.
ஜோகூர் மாநிலத்தின் மெர்சிங் மற்றும் கோத்தா திங்கி ஆகிய
மாவட்டங்களில் வியாழன் தொடங்கி ஞாயிறு வரை தொடர்ச்சியாக
மழைப் பெய்யும் எனவும் அத்துறை குறிப்பிட்டது.
சபா மற்றும் சரவா ஆகிய மாநிலங்களில் உள்ள சில பகுதிகளும் இதே
போன்ற வானிலையை எதிர்கொள்ளும் எனவும் அது குறிப்பிட்டது.


