கோலா லங்காட், டிச.14: அடுத்த ஆண்டு முதல் அனைத்து கிராம மேம்பாடு மற்றும் பாதுகாப்புக் குழுக்களும் (JPKK) செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த மாநில அரசு உத்தேசித்துள்ளது.
கிராம நிர்வாகம் காலத்திற்கு ஏற்றவாறு நகர வேண்டும். ஒவ்வொரு அரசாங்கக் கொள்கையும் முறையாக வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்று கிராம மேம்பாட்டு ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ ரிசாம் இஸ்மாயில் கூறினார்.
“ஒவ்வொரு கிராமத்திலும் ஜேபிகேகே நிர்வாகத்தை வலுப்படுத்துவது, பாரம்பரிய கிராமங்களுக்கும் நவீன தொழில்நுட்பம் கிடைப்பதை உறுதி செய்வது உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை நாங்கள் கொண்டுள்ளோம்.
“2025 மாநில பட்ஜெட் AI தொழில்நுட்பத்தை வலியுறுத்துகிறது. எனவே, கிராமம் தற்போதைய வளர்ச்சிகளை பின்பற்ற வேண்டும்," என்று அவர் மீடியா சிலாங்கூரிடம் கூறினார்.


