NATIONAL

சபா மாநிலத்தின் 11வது ஆளுநராக மூசா அமான் நியமனம்

17 டிசம்பர் 2024, 4:34 AM
சபா மாநிலத்தின் 11வது ஆளுநராக மூசா அமான் நியமனம்

கோலாலம்பூர், டிச. 17- சபா மாநிலத்தின் 11வது ஆளுநராக மாநிலத்தின்

முன்னாள் முதலமைச்சர் துன் மூசா அமான் நியமிக்கப்பட்டுள்ளார்.

அவரது நியமனம் எதிர்வரும் 2025 ஜனவரி முதல் தேதி அமலுக்கு வருகிறது.

இங்குள்ள இஸ்தானா நெகாராவிலுள்ள பாலாய் ரோங்ஸ்ரீ கெச்சிலில்

நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றில் மாட்சிமை தங்கிய பேரரசர் சுல்தான்

இப்ராஹிம் பதவி நியமனப் பத்திரத்தை மூசா அமானிடம் ஒப்படைத்தார்.

சபா மாநில அமைப்புச் சட்டத்தின் 1வது ஷரத்தின்படி சபா மாநிலத்தின்

11வது ஆளுநராக மூசா அமான் (வயது 73) நியமிக்கப்படுகிறார். அவரது

நியமனம் 2025 ஜனவரி முதல் தேதி தொடங்கி 2028 டிசம்பர் 31 வரை

நான்கு ஆண்டுகளுக்கு அமலில் இருக்கும்.

இந்த நிகழ்வின் போது மூசா அமானுக்கு ‘துன்‘ அந்தஸ்தை தாங்கி வரும்

ஸ்ரீ மஹாராஜா மங்கு நெகாரா விருது வழங்கப்பட்டது.

இந்த பதவி நியமனச் சடங்கில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம்,

துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ ஃபாடில்லா யூசுப், சபா முதலமைச்சர்

டத்தோஸ்ரீ ஹாஜிஜி நோர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

சபா மாநிலத்தின் பியூபோர்ட்டில் கடந்த 1951ஆம் ஆண்டு மார்ச் 30ஆம்

தேதி பிறந்த மூசா அமான், ஆஸ்திரேலியாவின் எட்டிட் கோவன்

பல்கலைக்கழகத்தில் வர்த்தக நிர்வாகத் துறையில் முதுகலைப் பட்டம்

பெற்றார்.

கடந்த 2003ஆம் ஆணடு மார்ச் 27ஆம் தேதி சபா மாநிலத்தின் 14வது

முதலமைச்சராக அவர் பதவியேற்றார். இப்பதவியை அவர் 2018 ஆம்

ஆண்டு மே 12ஆம் தேதி வரை ஐந்து தவணைகள் வகித்ததன் மூலம் சபா

மாநிலத்தில் நீண்ட காலம் பதவியில் இருந்த முதலமைச்சர் என்ற

பெருமையைப் பெற்றார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.