ஜோகூர் பாரு, டிச. 17- ஜொகூர் மாநிலத்தில் இன்று காலை 8.00 மணி நிலவரப்படி 11 குடும்பங்களைச் சேர்ந்த மொத்தம் 36 பேர் வெள்ள நிவாரண மையங்களில் அடைக்கலம் நாடியுள்ளனர்.
பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் சிகாமாட், கம்போங் பத்து பாடாக் சமூக மண்டபத்தில் செயல்படும் தற்காலிக வெள்ள நிவாரண மையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக மாநில பேரிடர் மேலாண்மைக் குழுவின் (தலைவர் டான்ஸ்ரீ டாக்டர் அஸ்மி ரோஹானி கூறினார்.
மேலும், சிகாமாட், பூலோ காசாப்பில் உள்ள சுங்கை மூவார் நிலையத்தில் நீர் மட்டம் 8.53 மீட்டர் என்ற எச்சரிக்கை அளவில் இருப்பதாக இருப்பதாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
ஜோகூரில் உள்ள ஒன்பது மாவட்டங்களில் மெர்சிங் தவிர இதர இடங்களில் வானிலை தெளிவாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது என்றார் அவர்.


