கோலாலம்பூர், டிச.16- தலைநகரில் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற மறியல் போராட்டத்தின் போது பெண்மணி ஒருவரிடம் ஆபாச சைகை காட்டியதாகக் கூறப்படும் காவல் துறை உறுப்பினருக்கு எதிராக போலீசார் உள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தலைநகரில் பணி புரிந்து வரும் அந்த உறுப்பினரை தமது தரப்பு அடையாளம் கண்டுள்ளதாக கோலாலம்பூர் காவல்துறைத் தலைவர் டத்தோ ருஸ்டி முகமது இசா கூறினார்.
இதன் தொடர்பில் போலீஸாருக்கு புகார் கிடைக்காவிட்டாலும் விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பெர்னாமா தொடர்புகொண்ட அவர் போது தெரிவித்தார்.
முன்னதாக, இங்கு நடந்த மனித உரிமைப் போராட்டத்தின் போது புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்த தம்மை நோக்கி ஒரு போலீஸ்காரர் ஆபாச சைகை காட்டியதாகக் கூறி பெண்மணி ஒருவர் இண்ட்ஸ்டாகிராமில் வெளியிட்டப் பதிவு சமூக ஊடகங்களில் வைரலானது.
தாம் காண வேண்டும் என்பதற்காக அந்த போலீஸ்காரர் தம்மை நோக்கி அந்த சைகையை திரும்பத் திரும்ப காட்டியதாகவும் அப்பெண் கூறியுள்ளார்.


