மலேசியர்கள் மத்தியில் பிரிவினையை விதைப்பதை நோக்கமாகக் கொண்டிருக்கும் பெரிக்காத்தான் நேஷனல் தலைவர்கள் சமீபத்தில் கூறிய கருத்துக்களால் தாம் திகைப்பும் வியப்பும் அடைந்ததாக அவர் குறிப்பிட்டார்.
கற்பனையான அதிகார இழப்பைத் தடுக்க மலாய் இனத்தின் ஒற்றுமைக்கு அழைப்பு விடுக்கும் அவர்களின் அறிக்கைகள் பிற்போக்குத்தனமானது என்பதோடு கலகத்தையும் தூண்டக் கூடியவையாக உள்ளன அவர் சொன்னார்.
இதனை நாம் என்ன பெயர் கொண்டு அழைத்தாலும், காலாவதியான, இனவெறி கொண்ட சித்தாந்தங்களுக்கு மலேசியா இனி கட்டுப்படாது என்ற உண்மையை அந்தக் கூட்டணியின் மாயையான வியூகம் ஏற்க மறுக்கிறது.
பெரிக்காத்தான் நேஷனல் மாயையான எதிரிகளை கற்பனையில் உருவகப்படுத்திக் கொண்டு மலேசியர்களிடையே அச்சத்தையும் அவநம்பிக்கையும் ஏற்படுத்த முயல்கிறது. இது சிறந்த தலைமைக்கான பண்பு அல்ல; மாறாக அது ஒரு சதி நாசச் செயல்.
மலேசியா பன்முகத்தன்மை, ஒற்றுமை மற்றும் பரஸ்பர மரியாதை ஆகியவற்றின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்ட நாடு. வேறு பாடுகளுக்கு மத்தியில் ஒன்றிணைந்து இருப்பது எங்களுடைய பலம்.
நம்பிக்கைக்குப் பதிலாக அச்சத்தையும் கொண்ட நேர்மாறான பண்புகளை பெரிக்காத்தான் நேஷனல் புகுத்துகிறது.
இது ஒரு போதும் நடக்காது. அவர்கள் கருதுவதை விட மலேசியர்கள் சிறந்தவர்கள்.


