கோலாலம்பூர், டிச 13- நிலச்சரிவின் காரணமாக காஜாங் - சிரம்பான் சென். பெர்ஹாட் விரைவுச் சாலையின் (லெக்காஸ்) வடக்கு திசையில் 9.3 கிலோ மீட்டரில் உள்ள அவசரத் தடம் மற்றும் மெது பயணத் தடம் போக்குவரத்துக்கு மூடப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட பகுதிகளை சரிசெய்யும் பணிகளுக்கு வழி விடும் வகையில் சம்பந்தப்பட்ட இரண்டு தடங்களும் மூடப்படுவதாக லெக்காஸ் நிறுவனம் அறிக்கை ஒன்றில் தெரிவித்தது.
நெடுஞ்சாலை மற்றும் நெடுஞ்சாலையைப் பயன்படுத்துபவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக போக்குவரத்து மேலாண்மைத் திட்டம், 24 மணி நேர கண்காணிப்பு மேற்கொள்ளப்படுகிறது.
பாதிக்கப்பட்டப் பகுதியை கடக்கும் போது போக்குவரத்து மேலாண்மைத் திட்டம் மற்றும் அறிவிப்பு பலகைகளைப் பின்பற்றி நடக்குமாறு வாகனமோட்டிகள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
உதவி அல்லது கூடுதல் தகவல்களுக்கு பொதுமக்கள் லெக்காஸ் இன்ஃபோலைனை 1-800-888-021 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.


