கோலாலம்பூர், டிச. 12 - கடந்த வாரம் குழந்தை பராமரிப்பாளர் ஒருவர் ஒரு வயது ஆண் குழந்தை பராமரிப்பில் அலட்சியமாக நடந்துக் கொண்டதன் விளைவாக அக்குழந்தைக்கு காயம் ஏற்பட்டதாக இன்று செஷன்ஸ் நீதிமன்றத்தில் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.
49 வயதான ஜொனிதா முகமட் ஜோஹா டிசம்பர் 4 ஆம் தேதி மாலை 5 மணியளவில், செத்தாபாக் ஜெயா, வாங்சா மாஜூவில் உள்ள வீடு ஒன்றில் இந்தக் குற்றத்தைச் செய்ததாகக் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.
குழந்தைச் சட்டம் 2001 இன் பிரிவு 31 (1) (a) இன் கீழ் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. குற்றம் நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சமாக RM50,000 அபராதம் அல்லது 20 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது இரண்டுமே விதிக்கப்படும்.
நீதிபதி அஸ்ரோல் அப்துல்லா, குற்றம் சாட்டப்பட்டவருக்கு ஒரு உத்தரவாதத்துடன் RM13,000 ஜாமீன் வழங்கினார், மேலும் வழக்கின் சாட்சிகளுக்கு இடையூறு செய்யக்கூடாது, மாதத்திற்கு ஒருமுறை அருகிலுள்ள காவல்நிலையத்திற்கு செல்ல வேண்டும் மற்றும் பாஸ்போர்ட்டை நீதிமன்றத்தில் ஒப்படைக்கவும் உத்தரவிட்டார்.
- பெர்னாமா


