NATIONAL

2,634 கழிவுகளை அகற்றும் சட்டவிரோத தளங்கள் மூடப்பட்டுள்ளன

12 டிசம்பர் 2024, 9:29 AM
2,634 கழிவுகளை அகற்றும் சட்டவிரோத தளங்கள் மூடப்பட்டுள்ளன

கோலாலம்பூர், டிச 12 - இந்த ஆண்டு 1,500 டன் கழிவுகளை உள்ளடக்கிய தோராயமாக 2,634 கழிவுகளை அகற்றும் சட்டவிரோத தளங்கள் மூடப்பட்டுள்ளன.

இதில் RM412,000 சுத்தப்படுத்தும் நடவடிக்கைக்காக செலவிடப்பட்டது என்று வீட்டுவசதி மற்றும் உள்ளாட்சி துணை அமைச்சர் டத்தோ அய்மான் அதிரா சாபு தெரிவித்தார்.

28 நீதிமன்ற வழக்குகளில் தண்டனை விதிக்கப்பட்டது, மொத்த அபராதம் தொகை RM490,000 ஆகும்.

திடக்கழிவு மேலாண்மை மற்றும் பொது சுத்திகரிப்பு கழகம் (SWCorp) மூலம், ஏழு மாநிலங்களில் சட்டவிரோத கழிவுகளை அகற்றும் நடவடிக்கையை திடக்கழிவு மேலாண்மை மற்றும் பொது சுத்திகரிப்பு சட்டம் 2007ன் கீழ் வீட்டுவசதி மற்றும் உள்ளாட்சி அமைச்சகம் மேற்கொண்டது.

இந்த மாநிலங்களில் பெர்லிஸ், கெடா, பகாங், நெகிரி செம்பிலான், மலாக்கா, ஜோகூர், கோலாலம்பூர் மற்றும் புத்ராஜெயா ஆகியவை அடங்கும்.

"2024 முழுவதும் SWCorp அமலாக்க அதிகாரிகளால் மொத்தம் 4,134 ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன," என்று அவர் கூறினார்.

இன்று மக்களவையில் வாய்வழி கேள்வி பதில் அமர்வின் போது தஞ்சோங் காராங் எம்பி டத்தோ டாக்டர் சுல்காப்பெரி ஹனாபியின் கேள்விக்கு அதிரா இவ்வாறு பதிலளித்தார்

SWCorp வழியாக சட்டவிரோத கழிவு இடங்களை எதிர்த்துப் போராடுவதற்கான முயற்சிகளை வீட்டுவசதி மற்றும் உள்ளாட்சி அமைச்சகம் தீவிரப்படுத்தும் என்று பிரதி அமைச்சர் வலியுறுத்தினார்.

இந்த நடவடிக்கைகளில் ஹாட்ஸ்பாட்களை ஆய்வு செய்தல், சிசிடிவி

கேமராக்கள் மூலம் கண்காணித்தல் மற்றும் சோதனைகள், அமலாக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளுதல் ஆகியவையும் அடங்கும்

- பெர்னாமா

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.