ஷா ஆலம், டிச 10: இன்னும் மடாணி புத்தக வவுச்சரை பெற்று கொள்ளாத நபர்களுக்கு டிசம்பர் 31-ஆம் தேதி வரை கால அவகாசம் உள்ளது என்று கல்வி துணை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
3,558,024 மாணவர்கள் பயனடையும் இந்த திட்டத்திற்கு RM 290 மில்லியன்
ஒதுக்கப்பட்டுள்ளதாக வோங் கா வோ கூறினார்.
அக்டோபர் 21 ஆம் தேதி நிலவரப்படி, RM 157 மில்லியன் மடாணி புத்தக வவுச்சர்கள் ரிடீம்
செய்யப்பட்டதாகக் கா வோ கூறினார்.
இந்த ஆண்டு இறுதி வரை வவுச்சர்கள் வழங்கும் நடவடிக்கை செயல்படுத்துவதை உறுதி
செய்வதற்காக, அனைத்து மாநில கல்வித் துறைகள், மாவட்டக் கல்வி அலுவலகங்கள்,
நூலக ஆசிரியர்கள் மற்றும் ஊடகங்களுக்கு கல்வி அமைச்சகம் புத்தக வவுச்சர்களை
மீட்டெடுப்பது தொடர்பாக விளக்க அமர்வை நடத்தியது.
ஒட்டுமொத்தமாக, புத்தக வவுச்சர் திட்டம் மாணவர்களிடையே கல்வியறிவின் வளர்ச்சியை ஆதரிப்பது மட்டுமல்லாமல், தரமான கல்வி ஆதாரங்களுக்கான அணுகலை அதிகரிக்கவும், வாசிப்பில் ஆர்வத்தை தூண்டவும் முடியும் என்று கா வோ கூறினார்.
ஆரம்பப் பள்ளி மாணவர்கள் (நான்காம் ஆண்டு மற்றும் அதற்கு மேல்) RM50 வவுச்சரைப்
பெறுகிறார்கள், அதே சமயம் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் மற்றும் ஆறாம் படிவம்,
கல்லூரி, தொழிற்கல்வி கல்லூரி, மெட்ரிகுலேஷன் மற்றும் மலேசிய ஆசிரியர் கல்வி
நிறுவனத்தில் (IPGM)பயிலும் மாணவர்கள் RM100 பெறுகிறார்கள்.


